Listen to the song

தமிழில்

Devendra Sangha Vaguppu

Ragam: punnAgavarALi , Talam: sankIrNa rUpakam (2 kaLai) (22)

dharaNiyil araNiya muraN iraNiyan udalthanai naga nudhikodu

saadOngu nedun giri OdEndhu bayankari (1)

dhamaruga paripura olikodu nadanavil charaNiya chathur maRai

dhaathaambuya manthira vEdhaantha paramparai (2)

sarivaLai virisadai eripurai vadivinaL sathadhaLa muguLitha

thaam aankucha men thiru thaaLaanthara ambikai (3)

tharu pathi surarodu saruviya asurargaL thada maNimudi podi

thaan aampadi sengkaiyil vaaL vaangiya sankari (4)

iraNa kiraNa mada mayil mrugamadha puLakitha iLamulai iLa

neer thaangi nudangiya noolpOndra marunginaL (5)

iRugiya siRu piRai eyirudai yamapadar enadhuyir koLa varin

yaan Engudhal kaNdedhir thaan Endru koLum kuyil (6)

idubali kodu thiri iravalar idar kedavidu mana karathala

Ekaambarai indhirai mogaanga sumangalai (7)

ezhudhiya padamena iruL aRu sudaradi iNai thozhu mavunigaL

Ekaantha sugam tharu paasaangkusa sundhari (8)

karaNamu maraNamu malamodum udalpadu kaduvinai kedaninai

kaalaanthari kandhari neelaanjani nanjumizh (9)

kanal eri gaNapaNa guNamaNi aNipaNi kanavaLai marakatha

kaasaambara kanjuLi dhoosaam padi koNdavaL (10)

kanaikazhal ninaiyalar uyiravi bayiravi gavuri kamalai kuzhai

kaadhaarndha sezhung kazhuneer thOyndha perun thiru (11)

karaipozhi thirumuka karuNaiyil ulagezhu kadanilai peRavaLar

kaavEndhiya painkiLi maa saambavi thandhavan (12)

araNedu vadavarai adiyodu podipada alaikadal keda ayil

vEl vaangiya senthamizh noolOn kumaran guhan (13)

aRumukan orupadhod irubuyan abinavan azhagiya kuRamagaL

thaarvEyndha buyan pagaiyaa maandhargaL anthagan (14)

adanmigu kadathada vikatitha madhakaLiR anavarathamum

agalaa maanthargaL chinthaiyil vaazhvaam padi sendhilil (15)

adhipathi ena varu poru thiral muruganai aruLpada mozhibavar

aaraayndhu vaNanguvar dhEvEndhira sangamE (16)

In English

தேவேந்திர சங்க வகுப்பு


தரணியி லரணிய முரணிர ணியனுடல் தனைநக நுதிகொடு

சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி ...... 1

தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை

தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை ...... 2

சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள் சததள முகுளித

தாமாங்குச மென்றிரு தாளாந்தர அம்பிகை ...... 3

தருபதி சுரரோடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி

தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி ...... 4

இரணகி ரணமட மயின்ம்ருக மதபுள கிதவிள முலையிள

நீர்தாங்கிநு டங்கிய நூல்போன்றம ருங்கினள் ...... 5

இறுகிய சிறுபிறை யெயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின்

யானேங்குதல் கண்டெதிர் தானேன்றுகொ ளுங்குயில் ...... 6

இடுபலி கொடுதிரி யிரவலர் இடர்கெட விடுமன கரதல

ஏகாம்பரை யிந்திரை மோகாங்கசு மங்கலை ...... 7

எழுதிய படமென இருளறு சுடரடி யிணைதொழு மவுனிகள்

ஏகாந்தசு லந்தரு பாசாங்குச சுந்தரி ...... 8

கரணமு மரணமு மலமொடு முடல்படு கடுவினை கெடநினை

காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ் ...... 9

கனலெரி கணபண குணமணி யணிபணி கனவளை மரகத

காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள் ...... 10

கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரிக மலைகுழை

காதார்ந்தசெ ழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு ...... 11

கரைபொழி திருமுக கருணையி லுலகெழு கடனிலை பெறவளர்

காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன் ...... 12

அரணெடு வடவரை யடியொடு பொடிபட அலைகடல் கெடஅயில்

வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன்கும ரன்குகன் ...... 13

அறுமுக னொருபதொ டிருபுய னபினவ னழகிய குறமகள்

தார்வேந்தபு யன்பகை யாமாந்தர்கள் அந்தகன் ...... 14

அடன்மிகு கடதட விகடித மதகளி றனவர தமுமக

லாமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில் ...... 15

அதிபதி யெனவரு பெருதிறல் முருகனை அருள்பட மொழிபவர்

ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே ...... 16