Listen to the verses

Meaning of the verses

தமிழில்

Verses 11 - 15

Ragam: Arabhi , Talam: tisra maTyam (8) [3-2-3]

11 'kUkA' ena enkiLai

'kUkA' ena enkiLai kUdi azhap

pOgA vagai meipporuL pEsiyavA

nAgAsala vElava nAlukavith

thiyAgA suralOga sigAmaNiyE!


12 semmAn magaLaith

semmAn magaLaith thirudum thirudan

pemmAn murugan piRavAn iRavAn

'summA irusollaRa' endRalumE

ammA poruL ondRum aRindhilanE!


13 murugan thanivEl

murugan thanivEl muninam guru endRu

aruLkoNdu aRiyAr aRiyum tharamO

uruvandRu aruvandRu uLadhandRu iladhandRu

iruLandRu oLiyandRu ena nindRadhuvE!


14 kaivAi kadhirvEl

kaivAi kadhirvEl murugan kazhalpetRu

uiyvAi mananE ozhivAi ozhivAi

meivAi vizhi nAsiyodum seviyAm

aiyvAi vazhi sellum avAvinaiyE!


15 murugan kumaran

murugan kumaran guhan endRu mozhindhu

urugum seyalthandhu uNarvu endRu aruLvAi

poru pungkavarum puviyum paravum

gurupungkava eN guNa pancharanE!


In English

பாடல் 11 - 15

ராகம்: ஆரபி , தாளம்: திஸ்ர மட்யம் (8) [3 - 2 - 3]

11 'கூகா' என என்கிளை

'கூகா' எனஎன் கிளைகூ டிஅழப்

போகா வகைமெய்ப் பொருள்பே சியவா

நாகாசல வேலவ நாலுகவித்

தியாகா சுரலோக சிகாமணியே!


12 செம்மான் மகளைத்

செம்மான் மகளைத் திருடுந் திருடன்

பெம்மான் முருகன் பிறவான் இறவான்

'சும்மா இருசொல் லற'என் றலுமே

அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே!


13 முருகன் தனிவேல்

முருகன் தனிவேல் முநிநம் குருவென்

றருள்கொண் டறியார் அறியுந் தரமோ

உருவன் றருவன் றுளதன் றிலதன்

திருளன் றொளியன் றெனநின் றதுவே!


14 கைவாய் கதிர்வேல்

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்

றுய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்

மெய்வாய் விழி நாசியொடும் செவியாம்

ஐவாய் வழி செல்லும் அவாவினையே!


15 முருகன் குமரன்

முருகன் குமரன் குகனென்று மொழிந்

துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்

பொருபுங் கவரும் புவியும் பரவுங்

குருபுங்கவ எண்குண பஞ்சரனே!