Listen to the verses

Meaning of the verses

தமிழில்

Verses 6 - 10

Ragam: gowLai , Talam: tisra maTyam (8) [3-2-3]

6 thiNiyAna manO

thiNiyAna manOsilaimeedhu unathAL

aNiyAr aruvindham arumbhumadhO?

paNiyA vena vaLLi padham paNiyum

thaNiyA vadhimOga dhayAparanE.


7 keduvAi mananE

keduvAi mananE gadhi kEL: karavAdhu

iduvAi vadivEl iRaithAL ninaivAi

suduvAi nedu vEdhanai thULpadavE

viduvAi viduvAi vinai yAvaiyumE!


8 amarum padhi kEL

amarum padhi kEL agam Am enum ip

pimaram keda meipporuL pEsiyavA

kumaran girirAsa kumAri magan

samaramporu thAnava nAsaganE!


9 mattu Ur kuzhal

mattu Ur kuzhal mangaiyar maiyal valaip

pattu Usalpadum parisu endRu ozhivEn?

thattu Udu aRa vEl sayilaththu eRiyum

nittUra nirAkula nirppayanE!


10 kAr mAmisai

kAr mAmisai kAlan varin kalabaththu

Er mAmisai vandhu edhirap paduvAi

thArmArba valAri thalAri enum

sUrmA madiyath thodu vElavanE!


In English

பாடல் 6 - 10

ராகம்: கௌளை , தாளம்: திஸ்ர மட்யம் (8) [3 - 2 - 3]

6 திணியான மனோ

திணியா னமனோ சிலைமீ துனதாள்

அணியா ரரவிந்த மரும்புமதோ?

பணியா வென வள்ளி பதம் பணியுந்

தணியா வதிமோக தயாபரனே!


7 கெடுவாய் மனனே

கெடுவாய் மனனே கதிகேள்: கரவா

திடுவாய்; வடிவே லிறைதாள் நினைவாய்;

சுடுவாய் நெடுவே தனைதூள் படவே;

விடுவாய் விடுவாய் வினையா வையுமே!


8 அமரும் பதி கேள்

அமரும் பதிகே ளகமா மெனுமிப்

பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா

குமரன் கிரிராச குமாரி மகன்

சமரம்பொரு தானவ நாசகனே!


9 மட்டுஊர் குழல்

மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்

பட்டூசல் படும் பரிசென் றொழிவேன்?

தட்டூ டறவேல் சயிலத் தெறியும்

நிட்டூர நிராகுல நிர்ப்பயனே!


10 கார் மாமிசை

கார்மா மிசைகா லன்வரிற் கலபத்

தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய்

தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்

சூர்மா மடியத் தொடுவே லவனே!