Listen to the verses

Meaning of the verses

தமிழில்

Verses 16 - 20

Ragam: kEdAram , Talam: tisra maTyam (8) [3-2-3]

16 pErAsai enum

pErAsai enum piNiyil piNipattu

OrA vinaiyEn uzhalath thagumO

veerA mudhusUr padavEl eRiyunj

sUrA suralOga thurandharanE!


17 yAm Odhiya kalviyum

yAm Odhiya kalviyum em aRivum

thAmEpeRa vElavar thandhadhanAl

pUmEl mayalpOi aRam meippuNarveer

nAmEl nadaveer nadaveer iniyE!


18 udhiyA mariyA

udhiyA mariyA uNaRa maRavA

vidhimAl aRiyA vimalan pudhalvA!

adhigA! anagA! abayA! amarA!

padhigA! valasUra! bayangaranE!


19 vadivum thanamum

vadivum thanamum manamum guNamum

kudiyum kulamum kudibOgiyavA,

adi andham ilA ayilvEl arasE!

midi endRoru pAvi veLippadinE!


20 aridhAgiya meip poruLukku

aridhAgiya meip poruLukku adiyEn

uridhA ubadhEsam uNarththiyavA

viridhAraNa vikrama vEL imaiyOr

purithAraga nAga purandharanE!


In English

பாடல் 16 - 20

ராகம்: கேதாரம் , தாளம்: திஸ்ர மட்யம் (8) [3 - 2 - 3]

16 பேராசை என்னும்

பேராசை எனும் பிணியிற் பிணிபட்

டோரா வினையேன் உழலத் தகுமோ

வீரா முதுசூர் படவேல் எறியுஞ்

சூரா சுர லோக துரந்தரனே!


17 யாம்ஓதிய கல்வியும்

யாமோதிய கல்வியும் எம்மறிவுந்

தாமேபெறவேலவர் தந்ததனாற்

பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்

நாமேல் நடவீர் நடவீர் இனியே!


18 உதியா மரியா

உதியா மரியா உணரா மறவா

விதிமால் அறியா விமலன் புதல்வா!

அதிகா! அநகா! அபயா! அமரா!

பதிகா! வலசூர! பயங் கரனே!


19 வடிவும் தனமும்

வடிவுந் தனமும் மனமுங் குணமுங்

குடியுங் குலமுங் குடிபோ கியவா

அடியந் தமிலா அயில்வேல் அரசே!

மிடியொன்றொரு பாவி வெளிப் படினே!


20 அரிதாகிய மெய்ப் பொருளுக்கு

அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேன்

உரிதா உபதேசம் உணர்த் தியவா

விரிதாரண விக்ரம வேளிமையோர்

புரிதாரக நாக புரந் தரனே!