Listen to the verses
Meaning of the verses
karudhA maRavA neRikANa enakku
iruthAL vanasam thara endRu isaivAi
varadhA murugA mayilvAgananE
viradhA sura vibAdaNanE!
kALaik kumarEsan enak karudhith
thALaip paNiyath thavam eidhiyavA
pALaik kuzhal vaLLi padham paNiyum
vELach sura pUbadhi mEruvaiyE!
adiyaik kuRiyAdhu aRiyAmaiyinAn
midiyak kedavO muRaiyO muRaiyO
vadi vikrama vElmagibA kuRamin
kodiyaip puNarum guNa bUdharanE!
kUrvEl vizhi mangkaiyar kongkaiyilE
sErvEn aruL sEravum eNNum adhO
sUr vErodu kundRu thoLaiththa nedum
pOrvEl purandhara bUbadhiyE!
meiyE ena vevvinai vAzhvai ugandhu
aiyO adiyEn alaiyath thagumO
kaiyO ayilO kazhalO muzhudhum
seiyOi mayilERiya sEvaganE!
கருதா மறவா நெறிகாண எனக்
கிருதாள் வனசந் தரஎன் றிசைவாய்
வரதா முருகா மயில்வா கனனே
விரதா சுரசூர விபாட ணனே!
காளைக் கும ரேசன் எனக்கருதித்
தாளைப் பணியத் தவமெய் தியவா
பாளைக் குழல் வள்ளி பதம்பணியும்
வேளைச் சுரபூ பதி மேருவையே!
அடியைக் குறியா தறியா மையினான்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடிவிக் ரமவேல் மகிபா குறமின்
கொடியைப் புணருங் குணபூ தரனே!
கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ
சூர்வே ரொடு குன்று தொளைத்தநெடும்
போர்வேல் புரந்தர பூ பதியே!
மெய்யே எனவெவ் வினைவாழ் வையுகந்
தையோ அடியேன் அலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதுஞ்
செய்யோய் மயிலேறிய சேவகனே!