Listen to the verses

Meaning of the verses

தமிழில்

Verses 31 - 35

Ragam: sindhubhairavi , Talam: tisra maTyam (8) [3-2-3]

31 pAzhvAzhvu enum

pAzhvAzhvu enum ippadumAyaiyilE

veezhvAi ena ennai vidhiththanaiyE

thAzhvAnavai seidhavaithAm uLavO

vAzhvAi ini nee mayilvAgananE!


32 kalaiyE padhaRik

kalaiyE padhaRik kadhaRith thalaiyUdu

alaiyE padumARu adhuvAi AiyvidavO

kolaiyE puri vEdarkulap pidi thOi

malaiyE malai kURidu vAgaiyanE!


33 sindhA Agulam

sindhA Agulam illOdu selvam enum

vindhAdavi endRu vidappeRuvEn?

mandhAgini thandha varOdhayanE

kandhA murugA karuNAgaranE!


34 singAra madandhaiyar

singAra madandhaiyar theeneRi pOi

mangkAmal enakku varam tharuvAi!

sangkrAma sigAvala saNmuganE!

gangA nadhi bAla krubAgaranE!


35 vidhikANum udambai

vidhikANum udambai vidA vinaiyEn

kadhikANa malarkkazhal endRu aruLvAi?

madhivANudhal vaLLiyai alladhu pin

thudhiyA viradhA sura bUbadhiyE!


In English

பாடல் 31 - 35

ராகம்: ஸிந்துபைரவி , தாளம்: திஸ்ர மட்யம் (8) [3 - 2 - 3]

31 பாழ்வாழ்வு எனும்

பாழ்வாழ் வெனுமிப் படுமாயையிலே

வீழ்வாயென என்னை விதித்தனையே

தாழ்வா னவைசெய் தனதாம் உளவோ

வாழ்வாய் இனிநீ மயில்வா கனனே!


32 கலையே பதறிக்

கலையே பதறிக் கதறித் தலையூ

டலையே படுமா றதுவாய் விடவோ

கொலையே புரி வேடர்குலப் பிடிதோய்

மலையே மலைகூறிடு வாகையனே!


33 சிந்தா ஆகுலம்

சிந்தா குலஇல் லொடுசெல் வமெனும்

விந்தா டவி என்று விடப் பெறுவேன்?

மந்தா கினிதந்த வரோதயனே

கந்தா முருகா கருணா கரனே!


34 சிங்கார மடந்தையர்

சிங்கார மடந்தையர் தீநெறிபோய்

மங்காமல் எனக்கு வரந் தருவாய்!

சங்க்ராம சிகாவல சண் முகனே!

கங்காநதி பாலக்ரு பாகரனே!


35 விதிகாணும் உடம்பை

விதிகாணும் உடம்பை விடா வினையேன்

கதிகாண மலர்க்கழல் என் றருள்வாய்?

மதிவா ணுதல்வள் ளியையல் லதுபின்

துதியா விரதா சுரபூ பதியே!