Listen to the verses
Meaning of the verses
nAdhA kumarA nama endRu aranAr
OdhAi ena Odhiyadhu epporUl thAn?
vEdhA mudhal viNNavar sUdumalarp
pAdhA kuRamin pAdhasEgaranE!
girivAi vidu vikrama vEl iRaiyOn
parivAram enum padham mEvalaiyE
purivAi mananE poRaiyAm aRivAl
arivAi adiyOdum agandhaiyaiyE!
AdhALiyai ondRu aRiyEnai aRath
theedhALiyai ANdadhu seppumadhO
kUdhALa kirAdhakulikku iRaivA
vEdhALa gaNam pugazh vElavanE!
mA Ezh sananam keda mAyai vidA
mU EdaNai endRu mudindhidumO
kOvE kuRamin kodiththOL puNarum
dhEvE sivasangkara dhEsiganE!
vinai Oda vidum kadhirvEl maRavEn
manaiyOdu thiyangki mayangkidavO
sunaiyOdu aruvith thuNaiyOdu pasum
thiNaiyOdu idhanOdu thirindhavanE!
நாதா குமரா நம என் றனார்
ஓதாய் என ஓதியதெப் பொருள்தான்?
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா குறமின் பாதசே கரனே!
கிரிவாய் விடுவிக் ரமவேல் இறையோன்
பரிவா ரம்எனும் பதமே வலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே!
ஆதாளியை ஒன் றறியே னை அறத்
தீதாளியை ஆண் டதுசெப் புமதோ
கூதாள கிராத குலிக் கிறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே!
மாவேழ் சனனங் கெடமா யைவிடா
மூவேடணை யென்று முடிந்திடுமோ
கோவே குறமின் கொடித்தோள் புணருந்
தேவே சிவசங்கர தேசிகனே!
வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங் கிடவோ
சுனையோ டருவித் துணையோ டுபசுந்
திணையோ டிதணோடு திரிந்தவனே!