Listen to the verses

Meaning of the verses

தமிழில்

Verses 41 - 45

Ragam: mOhanam , Talam: tisra maTyam (8) [3-2-3]

41 sAgAdhu enaiyE

sAgAdhu enaiyE saraNangkaLilE

kAgA namanAr kalagam seyum nAL

vAgA murugA mayil vAganaNE

yOgA siva njAna ubadhEsiganE!


42 kuRiyaik kuRiyAdhu

kuRiyaik kuRiyAdhu kuRiththu aRiyum

neRiyaith thani vElai nigazhththidalum

seRivatRu ulagOdu urai sindhaiyum atRu

aRivu atRu aRiyAmaiyum atRadhuvE!


43 thUsA maNiyum

thUsA maNiyum thugilum puNaivAL

nEsA murugA ninadhu anbu aruLal

AsA nigaLam thugaLayina pin

pEsA anubUdhi piRandhadhuvE!


44 sAdum thanivEl

sAdum thanivEl murugan saraNam

sUdumbadi thandhadhu sollumadhO

veedum surar mAmudi vEdhamum veng-

kAdum punamum kamazhum kazhalE!


45 karavAgiya kalviyuLAr

karavAgiya kalviyuLAr kadai sendRu

iravA vagai meipporuL eeguvaiyO

kuravA kumarA kulisAyudha kunj-

charavA sivayOga dhayAbaranE!


In English

பாடல் 41 - 45

ராகம்: மோஹனம் , தாளம்: திஸ்ர மட்யம் (8) [3 - 2 - 3]

41 சாகாது எனையே

சாகா தெனையே சரணங் களிலே

காகா நமனார் கலகஞ் செயுநாள்

வாகா முருகா மயில்வா கனனே

யோகா சிவஞா னொபதே சிகனே!


42 குறியைக் குறியாது

குறியைக் குறியாது குறித்தறியும்

நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலுஞ்

செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்

றறிவற் றறியாமையும் அற்றதுவே!


43 தூசா மணியும்

தூசா மணியுந் துகிலும் புனைவாள்

நேசா முருகா நினதன் பருளால்

ஆசா நிகளந் துகளா யினபின்

பேசா அநுபூதி பிறந்ததுவே!


44 சாடும் தனிவேல்

சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்

சூடும் படிதந் ததுசொல் லுமதோ

வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங்

காடும் புனமுங் கமழுங் கழலே!


45 கரவாகிய கல்வியுளார்

கரவா கியகல்வி யுளார் கடைசென்

றிரவா வகைமெய்ப் பொருள் ஈகுவையோ

குரவா குமரா குலிசா யுதகுஞ்

சரவா சிவயோக தயாபரனே!